






Agarbathi and Sambrani
Agarbathi and Sambrani used in pooja temples. Available in flavor that suits everyone. Has good fragrance. Everyday two agarbathi should be use.
தெய்வ பூஜைகளின் போது, வாசமிக்க தூபங்கள் கொளுத்தி இறை வழிபாடு செய்யப்படுகிறது. அப்படி தூபங்கள் காட்டி வழிபடும் சமயம் கீழ்’கூறிய மந்திரத்தை ஜெபித்து, தெய்வ பூஜை செய்வதால் உறுதியான நன்மைகள் உண்டாகும்.
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப்பத்தர் ஆகி அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிநல்விளக்குத்தூபம் விதியினால் , இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.
வீட்டில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் நேரத்தில் கூற வேண்டியமந்திரம் இது.
குறிப்பாக இம்மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற போது, மலர்கள் சாற்றி தீபம் ஏற்றிய பிறகு தூபம் காட்டும் போது இம்மந்திரம் துதித்து வழிபடுவதால், வீட்டில் துர்சக்திகள் நீங்கும்.
பூஜையின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.