


Navadhanya mootai
Navadhanya mixture mootai
navadhanya mixture mootai consist of 9 grains which will improve business, and family wealth.
நவதான்ய மூட்டை:
இந்த நவதான்ய மூட்டை நம்வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவும், தொழிலில் மந்த நிலை விலகி தொழில் சிறக்கவும், சுய தொழிலாக இருந்தால் வாடிக்கையாளர் நம்மை நாடி வரவும் உகந்தது என நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்த நவதான்ய மூட்டையில் நெல், கோதுமை, துவரை, எள்ளு, பச்சைபயறு, மொச்சை, கடலை, மற்றும் உளுந்து தந்துள்ளேன் காரணம் நவதானியம் என்பது நமக்க நவக்கிரக கடவுளின் ஆசியையும் பசுமையான வளத்தையம் பெற்றுத்தரும்.
சோழி:
வீட்டில் எப்படிபட்ட வாஸ்து தோஷம் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து நம் வீட்டிற்கு மங்களத்தையும் மகாலட்சுமி கடாட்சத்தையும் தரும் அற்புத சக்தி சோழிக்கு மட்டுமே உண்டு என்பது முன்னோர்களின் வாக்கு.
கடுக்காய்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் திருஷ்டியை போக்கி நிம்மதியான உறக்கத்தையும், தெளிவான சிந்தனையும் தருவது கடுக்காய்.
கடுக்காய்க்கு இறங்காத திருஷ்டியே கிடையாது எனலாம். அந்த அளவிற்கு கடுக்காய் நம் குடும்ப உறுப்பினர்களின் திருஷ்டியை போக்கி நீண்ட நிம்மதியையும் மன அமைதியையும் தரக்கூடியது கடுக்காய்.
வசம்பு:
குழந்தை செல்வம் தான் வீட்டையும் நம் மனதையும் நிறைக்கும் அற்புத செல்வம். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் வசம்பு ஒரு துண்டாவது இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
காரணம் வசம்பு குழந்தைகளின் இரண்டாவது தாய் எனலாம் அந்த அளவிற்கு குழந்தைகளின் உடல் வியாதியை போக்கி குழந்தைகளின் திருஷ்டியையும் கழித்து நிம்மதியான தூக்கத்திற்கு வழி செய்கிறது.