Sindinga9
0
Punugu
₹90.00
  • Tags :   punugu,  punugu online
புணுகு Punugu (2 Grams of product)
Quantity
Add to Cart
Product Details

Punugu புணுகு

punugu vasanai thiraviyam is uses for homam, sadangu and all ceremonies. We have more vasanai thiraviyam in best quality and price


புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் முன்னோர்கள்.

புனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் பூனைகளிடம் இருந்து பெறப்படுவதாகும், இந்தப் பூனைகள் குறிப்பிடும் அளவில், ஆப்பிரிக்க தேசங்களில் காணப்படுகின்றன, நமது நாட்டில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள், அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவதே, புனுகுப் பூனைகளின் தனி அடையாளமாக விளங்குகிறது.

ஏனெனில் இதே போன்ற தோற்றத்தில் உள்ள சாதாரணப் பூனைகளையும் சிலர் புனுகுப் பூனைகள் என்று நினைத்து, அவற்றை பிறருக்குத் தெரியாமல் வளர்த்து வருவர்.

அரிய விலங்காகையால், வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி, குற்றமாகும்.

தற்காலங்களில் காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டுவதும், பாதைகள் அமைப்பதும், இவற்றின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்து அங்கிருந்து தப்பி, சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிடுகின்றன, புனுகுப் பூனைகள்.

சமவெளிகளில், உள்ள அடர்ந்த முந்திரித் தோப்புகள் மற்றும் நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.

Punugu பயன்கள்

சுவாசப் பாதிப்புகள் நீங்க, புனுகை உபயோகித்து, மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள், முன்னோர்கள்.

தேவை: புனுகு, கஸ்தூரி மஞ்சள், பூவரசன் வேர், வெள்ளெருக்கன் வேர், சிருநாகப் பூ மற்றும் வெடி உப்பு.

இவற்றில் கஸ்தூரி மஞ்சள் இரு பங்கு கூடுதலாகச் சேர்த்து, பூவரசன் வேர் மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவற்றை புனுகைவிட ஒரு பங்கு கூடுதலாக எடுத்துக்கொண்டு.

எல்லா பொருட்களையும் சேர்த்து, சற்று நீர் இட்டு,அம்மியில் வைத்து,நன்கு மையாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த புனுகுப் பசையை, ஒரு வெள்ளைத்துணியின் ஒரு பக்கத்தில் முழுவதுமாக நன்கு தடவி வைக்க வேண்டும், பின்னர் அதை வெயிலில் இட்டு, அவற்றிலுள்ள நீர் எல்லாம் ஆவியாகி, நன்கு காய்ந்ததும், மடித்து சுத்தமான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புனுகு மருந்துத் துணியை, சிறு அளவில் கத்தரித்து எடுத்துக் கொண்டு, அதை சுருட்டி, தீயில் காட்டி, வரும் புகையை, மூக்கில் நன்கு இழுத்து சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில், புனுகு மருந்துத் துணியை தினமும் இரண்டு வேளை, சுருட்டிக் கொண்டு, தீயில் இட்டு, புகையை சுவாசித்து வர, சுவாச பாதிப்புகள் யாவும், நீங்கி விடும். இதன் மூலம், மூச்சு விடுதலில் உள்ள குறைபாடுகள், மூக்கின் நுகர்தலில் உள்ள பாதிப்புகள் எல்லாம் விலகி, உடல் நலமாகும்.

முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை போக்க

சிலருக்கு முகப்பருக்கள் வந்தது தெரியாமல், அவற்றை கை விரல்களால் கிள்ளி விடுவர், அதன் மூலம், அவற்றின் நச்சுக்கள் பரவி, தழும்பாகி முகத்தின் பொலிவை பாதிக்கும் படியாக அமையும்.

இதற்கு சிறந்த தீர்வாக, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி வந்து, இரவில் படுக்கப் போகும் முன், முகத்தை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு, பருக்கள், தழும்புகள் உள்ள இடங்களில் புனுகைத் தடவி, காலையில் எழுந்தவுடன், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர, அதுவரை மன வாட்டம் தந்து வந்த, முகப் பொலிவை பாதித்த பருக்கள் மற்றும் தழும்புகள் எல்லாம் விரைவில், மறைந்துவிடும்.

முகமும் புத்தெழில் பெரும்.புனுகு, கிடைக்கவில்லை என்றால், புனுகு எண்ணையை உபயோகித்தும் பலன்களைப் பெறலாம்.

Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.