Sindinga9
0
Vasambu powder

Vasambu powder

₹110.00
  • Tags :   Vasambu powder
100 grams
Quantity
Add to Cart
Product Details
Vasambu powder Vasambu powder இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம். அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது. சுடு தண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது Vasambu powder : பொடுகு கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான். பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும். சிறு குழந்தைகள் பழங்காலத்தில் பிறந்து 1 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு வசம்பை தேனில் குழைத்து கை குழந்தைகளின் நாக்கில் தடவி விடும் பழக்கத்தை அதிகம் மேற்கொண்டனர். இப்படி செய்வதால் சிறு குழந்தைகளுக்கு சீக்கிரமாக பேச்சு திறன் கைவரப்பெறுவதோடு உணவில் இருக்கும் நச்சுகளால் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு நச்சு முறிப்பான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர். Vasambu powder : கிருமி நாசினி வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வசம்பு இயற்கையிலேயே அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை பொருளாகும். சிறு குழந்தைகள் உறங்குகின்ற அறைகளில் வசம்பு பொடியை ஆங்காங்கே தூவி வைப்பதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. பூச்சி கடி நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவிவிடுகிறது. வசம்பை நன்கு பொடி செய்து கடிபட்ட இடங்களில் வைப்பதாலும், கொதிக்க வைத்த நீரில் வசம்பை போட்டு காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறிந்துவிடும்.
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.